பயணிகள் படகுகள் நேருக்கு நேர் மோதி 25 பேர் பலி! பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்
ஹொங்கொங்கின் லம்மா தீவுப்பகு தியில் இடம்பெற்ற படகு விபத்தில் 25 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப் படுகின்றது இரண்டு பயணிகள் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு படகில் 125 பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை படகிலிருந்த 40 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹொங்கொங்கில் இடம்பெற்ற இலையுதிர் பருவக்கால திருவிழா வானவேடிக்கை நிகழ்வுகளை பார்வையிட வந்தவர்களே விபத்தில் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரு பயணிகள் படகுகளும் வேகமாக மோதிக்கொண்டதால், பயணிகள் படகு தண்ணீரில் மூழ்கியதாக படகில் பயணித்த பயணிகளில் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment