புற்றுநோய் உள்ளதா? 20 வினாடிகளில் கண்டுபிடிக்க விசேட தொழில் நுட்பம் யாழ்ப்பாணத்தில்
தேசிய புற்றுநோய் ஒழிப்பு பிரிவு, சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவர் நிலையம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இணைந்து மார்பகம், கர்ப்பப்பை ஆகியவற்றில் ஏற்படும் புற்று நோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளன
இத்திட்டத்திற்கிணங்க புற்றுநோய் உருவாகி உள்ளதா? என்பதை 20 வினாடிகளில் கண்டு கொள்ளும் புதிய இரு தொழில்நுட்பத் தொகுதிகள் யாழ்ப்பாணத்திலும், கொழும்பு நாரேன்பிட்டியிலும் திறக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் 100 பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பதாகவும், இதில் 70 வீதமானோர் நோயின் இறுதிக் கட்டத்திலேயே நோய் பற்றி அறிகின்றனர் எனவும். முன்கூட்டியே அறிந்துகொண்டால் உயிராபத்தை தவிர்க்கலாம் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்
அத்துடன் 700 சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை வசதிகள் இருந்தும், பெண்கள் இப்பரிசோதனைகளை மேற்கொள்ளாமை கவலை தருவதாகும் என்றும், இதனால் மரணம் சம்பவிப்பதுடன் இரு நாட்களில் ஆகக்குறைந்தது மூன்று பேராவது கர்ப்பப்பை புற்றுநோயால் மரணிக்கின்றனர் என தேசிய புற்றுநோயாளர் ஒழிப்பு வேலைத் திட்டப் பணிப்பாளர் டொக்டர் நீலமனி பரணகம தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment