20:20 கிறிக்கற் போட்டிகளுக்கான ரிக்கட்டை திருடிய பிரித்தானியர் கைது.
நடைபெற்றுவரும் 20 டுவெண்டி கிறிக்கட் போட்டிக்கான மொத்தம் 100 டிக்கட்டுகள் கொண்ட 4 புத்தகங்களை, டிக்கட் கவுண்டரில் இருந்து திருடிய பிரித்தானியரான மான்சஸ்டரைச் சேர்ந்த 54 வயதுடைய அன்டோனியோ புல்லர் என்பவர் கொழும்பில் வைத்து பொலிஸாரால் (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
டிக்கட் கவுண்டர் வரைக்கும் சென்று எப்படியோ இந்த 4 புத்தகங்களையும் திருடியுள்ளார். அவரிடம் இந்த புத்தகங்கள் இருந்ததை நாங்கள் கண்டுபிடித்தோம் என்று பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இத்தகைய டிக்கட் திருடிய நிகழ்வு இம்முறைதான் முதல் தடவை. கடந்த மாதம் இதே போட்டிக்கான போலி ரீசேர்ட்டுக்கள் ஒரு தொழிற்சாலையில் இருந்து கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment