Monday, October 1, 2012

2000 முன்னாள் புலிகள் சிவில் பாதுகாப்புப் படையில் இணைவு - கிளிநொச்சியில் வைபவம்

புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 5000 பேரை சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்து, அவர்களை வடபகுதியின் அபிவிருத் திக்கு பயன்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 2000 பேரை சிவில் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் இணைத்துக் கொள்வது தொடர்பான நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெறுகின்றது.

இத்திட்டத்திற்கமைய 2000க்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாகவும், இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் ஒரு தொகுதியினருக்கே இன்றையதினம் நேர்முகப்பரீட்சை நடத்தி நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது என்று, சிவில் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று முதல் இவர்கள் சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் இவர்களுக்கு மாதாந்தம் 18000ற்கும் குறையாத சம்பளம் வழங்கப்பட விருப்பதுடன் ஏனைய வசதிகளும் இவர்களுக்குச் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com