Tuesday, October 2, 2012

பெண்களை நாசம் செய்த போலி தேரருக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனையை

பெண் ஒருவரை பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் றுவான்வெல்ல ஏ.சோபித்த தேரர் என்று அழைக்கப்பட்ட சுனில் சாந்த உள்ளிட்ட மூவருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறை தண்டனையை இன்று விதித்துள்ளது.

கேகாலை றுவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தேரர் மந்திர தந்திர வேலைகளால் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்தவர் என்றும், மந்திர தந்திர வேலைகளின் மூலம் கை தேர்ந்து அதன் மூலம் மிகுந்த பிரபலம் அடைந்து இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மந்திர தந்திர வேரைகளால் பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சொந்தக்காரகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இவரிடம் மந்திர தந்திர வேலைகளுக்கு வருபவர்களில் பொரும்பாலானவர்கள் இளம் யுவதிகள் எனவும், இவ்வாறு வரும் யுவதிகளுடன் இவர் மந்திர தந்திர வேலைகளுக்கான தயார்ப்படுத்தல் என்று கூறி அப்பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்கின்றமை இவருக்கு கைவந்த கலை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வானொலி ஒன்றில் பணிபுரியும் பெண் ஊடகவியலாளர் ஒருவர் இவரை மந்திர வேலைக்கு என அணுகி இருக்கின்றார். அப்பெண்ணுக்கு சோபித தேரர் பல தடவைகள் தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொண்டு பெண்ணிடம் அந்தரங்கமான கேள்விகளை தொலைபேசியில் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உல்லாசமாக இருக்க வருமாறு தேரர் அப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இவருடைய உரையாடல்களை பெண் ஊடகவியலாளரால் ஒலிப்பதிவு செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுறது. குறித்த ஒலிப்பதிவு வானொலியில் ஒலிபரப்பட்ட பின்னர் பொது மக்கள் தேரரை ஒரு போலியானவர் என தெரிவித்தனர் இதனையடுத்து தேரரின் மாடி வீட்டை முற்றுகை இட்டு வீட்டில் இருந்து ஆயுதங்கள், மதுபான போத்தல்கள் போன்றவற்றை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் குறித்த போலி தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com