பிரித்தானியாவில் காடையரின் அட்டகாசம், 150000 ரூபாவிற்கு ஏலத்தில் வீடு!
பிரிட்டனின், டீசைட் என்ற பகுதியில், சமூக விரோதிகளின் அட்டூழியங்களால், அப்பகுதியில் வாழவே மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் அப்பகுதியில், வீடுகளை, வந்த விலைக்கு விற்றுவிட்டு வேறு இடத்திற்கு மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். நகரின் உள்புறத்தில் உள்ள வீட்டை, 150000 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் வீட்டு உரிமையாளர்கள், சாலையின் பிரதான இடத்தில் அமைந்துள்ள தங்களது இன்னொரு வீட்டை, 212,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்க தயாராக உள்ளனர்.
சமூக விரோதிகளால் அடிக்கடி வீடுகளுக்கு தீ வைக்கப்படுவதால், தங்கள் சொத்து பாழாவதை தடுக்க, இந்த வீடுகளை விற்க முடிவு செய்துள்ளனர். எனினும், இந்த வீட்டை வாங்க ஒருவர், 1,046 கி.மீ., தூரத்திற்கு அப்பாலிருந்து வந்து, வீட்டை பார்த்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டு விற்பனை ஏஜன்ட், ரிச்சர்ட் வாட்சன் கூறியதாவது: இந்த விலைக்கு தான் விற்போம் என்று எதுவும் இல்லை. விரைவாக விற்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்று கூட விற்கலாம் என, நினைக்கிறோம். தற்போது, 150000 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் வீட்டின் அளவுடைய ஒரு வீடு, 'மிடில்ஸ்ப்ரோ' பகுதிக்கு அருகிலிருக்கும், 'போர்ட் க்ளாரன்ஸ்' பகுதியில், ஏறக்குறைய, அண்ணளவாக 138 லட்சம் ரூபாய்க்கு விலை போகும். சமூக விரோதிகளின் தொல்லையால், இவ்வளவு குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இவ்வாறு ரிச்சர்ட் வாட்சன் கூறினார்.
0 comments :
Post a Comment