நைஜீரியாவில் தேவாலயம் மீது கார்க் குண்டு தாக்குதல் பலர் பலி
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது அபுஜா நகரம். இங்குள்ள கிருஸ்தவ தேவாலயம் மீது குண்டுகள் நிரப்பப்பட்ட காரை கொண்டு தற்கொலைப்படையினர் இன்று தாக்குதல் நடத்தினர்.
இதில் பிரேயரில் ஈடுபட்டவர்களில் 15 பேர் கொல்லப்பட்டனர். 85 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக விரைந்த வந்த காவலர்கள் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக குண்டுகள் நிரப்பப்பட்ட காரை கொண்டு மலாலி பகுதியில் உள்ள சர்ச்சின் கேட்டை அவர்கள் நெருங்கியுள்ளனர்.
ஆனால் சரியான வழி கிடைக்காமல் அங்கிருந்து திரும்பிவிட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
எண்ணெய் வளம் மிக்க நைஜீரியாவில் இஸ்லாமியர் ஆட்சி கொண்டுவர போராடி வரும் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பின் செயலாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
0 comments :
Post a Comment