15 லட்சம் குடும்பத்தினதும், 27000 அதிகாரிகளதும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்படுக
திவிநெகும வாழ்வெழுச்சி திணைக்கள சட்டமூலம் நாட்டில் 15 லட்சம் குடும்பங்களினதும், 27000 அரச அதிகா ரிகளினதும் எதிர்காலம் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே இச்சட்டமூலம் தொடர்பாக தன்னிச்சையாக விமர்சனங்களை மேற்கொள்பவர்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தருணத்தில், இது தொடர்பில் கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவது முக்கியம் எனவும் அமைச்சர் தெரிவித் துள்ளார்.
திவிநெகும திணைக்கள சட்டமூலம் தொடர்பில், எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான தடைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திவிநெகும திட்டத்தின் நன்மைகளை கருத் திற்கொண்டு, அதற்கான நியாயமான விமர்சனங்களை முன்வைக்கவேண்டுமென்பதே தனது எதிர்பார்ப்பு என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment