மணமகனின் வயதோ 15 மணமகளின் வயது 26 – திருமணத்துக்கு பொலிஸில் கோரிக்கை
தமது 15 வயது மகனை, 26 வயது பெண்ணுக்கு மணமுடித்துக் கொடுக்க பெற்றோர் பொலிஸில் கோரிக்கை விடுத்துள்ளனர். 15வயது மணமகனின் பொற்றோரே திருமணத்தை நாடாத்த அத்துருகிரியை பொலிஸில் அனுமதி கோரியுள்ளனர்.
குறித்த 15வயது பையன் அத்துருகிரியைச் சேர்ந்தவர். பெண் மாலபேயைச் சேர்ந்தவர். சட்டப்படி திருமணம் முடித்தவரான இப் பெண் கணவனால் கைவிடப்பட்டவராவார். 15 வயது சிறுவனை மணமுடிப்பதை இந்தப் பெண்ணின் பெற்றோர் தீவிரமாக எதிர்ப்பதாகத் தெரியவருகின்றது.
எனினும் பெண் வயது வந்தவராகவும், பையன் சிற்றகவை பையனாக இருப்பதால் பொலிஸாரால் அனுமதி வழங்க முடியவில்லை என்றும், இவ்வாறான கோரிக்கை மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதல் தடவை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment