Tuesday, October 23, 2012

13 வது அரசியலமைப்பு திருத்தம் பற்றி தெளிவாக விளக்க இந்தியா செல்கிறார் கோத்தபாய!

"13 வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க வேண்டும் அல்லது மாற்றம் செய்ய வேண்டும்" என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், 13 வது அரசியலமைப்பு திருத்தம் பற்றிய தமது நிலைப்பாடு என்ன எனபது பற்றி கலந்துரையாடவும், புதுடில்லிக்கு வருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய அரசாங்கம் அழைத்துள்ளது. இதன் காரணமாக இம்மாத இறுதியில் பாதுகாப்புச் செயலாளர் இந்தியா பயணமாகின்றார்.

அத்துடன் த.தே.கூ சீனத் தூதுவரைச் சந்தித்து வடக்கில் இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு உதவக் கூடாது என்று கேட்டுக் கொண்டதை அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் பங்காளிகளான ஜாதிக ஹெல உருமய, மற்றும தேசிய சுதந்திர முண்ணணி என்பன 13 வது திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில், 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தை நீக்குவதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்று கேட்டு அமைச்சர் விமல் வீரசன்ச ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com