13வது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் அல்லது மாற்றம் செய்ய வேண்டும்– கோட்டாபய
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம், 13 வது அரசியலமைப் புக்கான திருத்தத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அது இலங்கைகுப் பொருத்தமானதல்ல என்றும், இந்தியாவால் இலங்கைக்கு அது திணிக்கப்பட்டது என்றும், அத்திருத்த சட்டம் யுத்தத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதற்கு முட்டுக் கட்டையாக இருக்கின்றது என, நகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்பாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திவிநெகும திட்டத்துக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழக்கிடுவதற்கு இந்த மாகாண சபை முறையே காரணம். எனவே. இதனை உடனடியாக நீக்க வேண்டும் அல்லது இன்றைய நிலைமைக்கேற்ப மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லார இறுது செய்தித்தாளுக்கு கருத்து வெளியிட்ட போதே அதனை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment