கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை டிசம்பர் 11 ஆம் திகதி ஆரம்பமாகும்
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை டிசம்பர் 11 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 21 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்து ள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதரண தர பரீட்சையை டிசம்பர் 11 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதீப்பீட்டு பணிகள் நவம்பர் 21 ஆம் திகதி நிறைவடையுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ள்யு. எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பல கட்டங்களின் கீழ் விடைத்தாள் மதீப்பீடடு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2 ஆம் கட்டத்தின் கீழ் பல்கலைக் கழக விரிவுரைகள் மற்றும் ஆசிரியர்கள் 8 ஆயிரத்து 785 பேர் பங்கேற்கவுள்ளனர். இதே வேளை உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்படு 30 பாடாசாலைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 6 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
0 comments :
Post a Comment