Tuesday, October 2, 2012

பட்டதாரிகள் 100 பேருக்கு, இன்று நியமனம்! எக்காரணத்ததலும் நியமனம் மாற்றப்படமாட்டாது

விஞ்ஞான மற்றும் கணிதப்பட்டதா ரிகள் 1000 பேருக்கு, இன்றைய தினம் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதா கவும், இது தொடர்பான நிகழ்வு இன்று மாலை 4.30 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நியமனங்கள் வழங்கப்படவுள்ள 1000 பேருக்கு தாங்கள் செயற்படவேண்டிய பாடசாலையின் பெயர் விபரங்களும் நியமனங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், கணித மற்றும் விஞ்ஞான பட்டதாரிகளுக்கு இன்று வழங்கப்படுகின்ற நியமனக்கடிதங்களில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய பாடசாலைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எக்காரணம் கொண்டும், நியமனங்கள் மாற்றி வழங்கப்பட மாட்டாதெனவும், குறைந்தது 5 வருடங்களேனும் ஆசிரியர்கள் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகளில் பணி யாற்ற வேண்டுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அவ்வாறு செயற்படாத பட்சத்தில் அவர்களுக்கான நியமனங்கள் இரத்து செய்யப்பட்டு அதற்கான சந்தர்ப்பம் வேறொரு பட்டதாரிக்கு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த சிந்தனையின்கீழ், முன்னெடுக்கப்பட்டு வரும் 1000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப் பட்டுள்ள பாடசாலைகளுக்கே குறித்த ஆசிரியர் நியமனம் வழங்கப்படுமென கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com