ஈரானில் போதை பொருள் கடத்திய 10 பேருக்கு தூக்கு!
ஈரானில் போதை பொருட்களை கடத்திய 10 பேருக்கு அந்நாட்டு மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தண் டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. மரண தண்டனை என்பது ஈரானில் வழக்கமான நிகழ்வாகும். சமீபத்தில் தலைநகர் டெஹ்ரானில் போதை பொருட்களை கடத்தி வந்த 2 மும்பலை பிடித்த ஈரான் அரசு அவர்களை கைது செய்தது.
இந்த நிலையில் நேற்று போதை பொருட்களை கடத்திய குற்றத்திற்காக அவர்களை உடனடியாக தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 10 பேரை நேற்று ஒரே நாளில் டெஹ்ரான் குற்ற மேடையில் வைத்து தூக்கிலிட்டது. இதற்க்கு மனித உரிமை கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரான் சிறைத்துறை அதிகாரி கூறுகையில், இஸ்லாமிய நம்பிக்கையின் படியே சட்டம் உள்ளது. அதன்படியே தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
போதை பொருட்கள் கடத்தல் மிகவும் அதிகரித்துள்ளது என்றும் குற்றங்களை குறைக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment