களவெடுத்த பிரித்தானிய பிரஜைக்கு இலங்கையில் 1 வருட சிறைத்தண்டனை
அண்மையில் கொழும்பில் நடந்து முடிந்த இருபதுக்கு இருபது கிறிக்கட் போட்டியின் போது, ஒரு தொகை டிக்கற்களை களவெடுத்த குற்றத்திற் காக கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையான புல்லர் பிசரோ அன்டோனிய என்பவருக்கு, கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளார்.
சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாலும், அவர் முன்பு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படாதவராக இருந்ததாலும், அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்த தண்டனை விதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment