அரசியல் செயன்முறைகளில் ஈடுபட TNA க்கு இந்தியா அழுத்தம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அண்மைய இந்திய வருகையின் போது, இயலக்கூடிய ஒரு தீர்வுக்கு வருவதற்கான அரசியற் செயற்பா டுகளில், தமிழ் தேசியக் கூட்ட மைப்பு தன்னை முழுமையாக ஈடுபடச் செய்வதற்கான அழுத்தத்தை இந்திய அரசாங்கம் கொடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி கவனம் செலுத்தப்பட்டது.
போருக்குப் பின்னரான வடக்கு கிழக்கின் மீள் கட்டுமானப் பணிகள், மீளிணக்க முயற்சிகள் மற்றும் அரசியல் தீர்வுக்கான அறிவுடைமைத் தேவைப்பாடு என்பன இருநாட்டுத் தலைவர்களின் கலந்துரையாடலில் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தன.
LLRC பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தலில் முன்னேற்றம் மற்றும் ஆணையத்தின் அறிக்கையின் மீது LLRC பரிந்துரைகளை வினைத்திறனுடையதாக நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் முயற்சி என்பன ஆராயப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment