Sunday, September 9, 2012

Operation success, Patient dead.

சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது, ஆனால் நோயாளி மரணம். சாவிலும் வாழ்வோம் என்கிற சவப்பெட்டிக்கடைக்காரர், வாய்கரிசி தயார் செய்கின்றவர்கள், மேளம் அடிக்கிறவர்கள், நிலப் பாவாடை விரிக்கிறவர்கள், ஏன் மரண அறிவித்தல் போடுற இணையத்தளங்கள் என பலருக்கும் நோயாளி செத்ததில் குதுகலந்தான்.

ஆனால் இங்கு சத்திரசிகிச்சைக்கு அல்லது விஷப்பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டது தமிழ் மக்களின் எதிர்காலம். அதாவது மரணமடைந்தது அப்பாவி தமிழ் மக்களில் எதிர்காலம். கிழக்கு மக்களை சூடேற்றி தமிழர் சார்பாக கைப்பற்றக்கூடிய 11 ஆசனங்களையும் தமிழ் தேசியக் கூட்டைமைப்பு கைப்பற்றியுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய சம்பந்தன் 'நடைபெறவுள்ள கிழக்கு மாகாண தமிழ் மக்கள் எந்தவிதமான தீர்ப்பை வழங்கப்போகிறார்கள் என்பதை சர்வதேச சமூகம் உண்ணிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த மக்கள் தங்களின் நீண்ட கால கோரிக்கைகளின் அடிப்படையில் தமக்கு  சுயாட்சி வேண்டும் இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தங்களது அரசியல், சமூக, பொருளாதார கலாசார அபிலாஷைகள் நிறைவேற்றக்கூடிய நிலையில் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் அதற்காக எமக்கு ஜனநாயகம் வேண்டும் எனக் கூறப்போகின்றார்களா? அல்லது அரசாங்கம் கூறுவது போல் அபிவிருத்தியை மட்டும் ஏற்று கிழக்கு மாகாண மக்கள் எங்களுடன் நிற்கின்றார்கள் என்று தங்கள் வாக்குகளை அரசாங்கத்திற்கு வழங்கப்போகின்றார்களா? என்பதை சர்வதேச சமூகம் உண்ணிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த கேள்விகளுக்குத்தான் நீங்கள் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் பதிலளிக்கப்போகின்றீர்கள்.' எனத்தெரிவித்துள்ளார்.

ஆம் ஐயாவின் கூற்றுப்படி எங்களுக்கு அபிவிருத்தி வேண்டாம், நீண்டகால அபிலாஷையான அரசியல் தீர்வுதான் வேண்டும் என்று மக்கள் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக மாகாண சபையில் 37 ஆசனங்களில் 11 ஆசனங்களில் தமிழ் தேசிய மந்திகளை அமர்த்தியிருக்கின்றார்கள். சம்பந்தனின் சர்வதேசம் அவதானிக்கின்றது என்று கூற்றுக்கு பயந்து வாக்களித்த மக்களுக்கு சர்வதேசம் எப்போது தீர்வை வாங்கிகொடுக்கும் என்பதற்கு சம்பந்தன் காலக்கெடு கூறாதகாரணத்தினால் நாம் அதை பற்றி கேட்க முடியாது, கேட்டால் நான் காலக்கெடு சொன்னநானோ என சண்டியன் சம்பந்தன் பாய்ந்து விழுவார். ஏன் இந்த வில்கண்டம்.

11 ஆசனங்களையும் கைப்பற்றி விட்டு கொடுப்புக்குள் நமிட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருக்கின்ற சம்பந்தனிடம் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எனக் கேட்கப்பட்டபோது 'கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் ஆட்சியமைப்பது குறித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களின்போது நாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு நடாத்தியிருக்கின்றோம், கூட்டு ஆட்சி ஒன்றை அமைப்பதற்கு இணக்கம் கண்டிருக்கின்றோம் என மக்களின் வாக்குகளை அபகரித்து ஆசனங்களை ஆக்கிரமித்துள்ள கூட்டமைப்பு தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாம்.

ஆம் என்னதான் முயற்சி செய்தாலும் சீண்டத்தகாத ஒரு வர்க்கத்துடன் கூட்டு வைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் காரர் என்ன அவ்வளவு அரசியல் முட்டாள்களா? அல்லது ரவுப் ஹக்கிமால் கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்துவிட்டு முஸ்லிம் மக்களின் மண்ணில் கால்தான் வைக்கமுடியுமா? இந்நிலையில் அவர் எப்படி சம்பந்தினின் தொலைபேசிக் பதிலளிப்பார். நோ ஆன்வர்.

பத்மினியின் பாஷையில் சொல்வதானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்கு தும்புத்துடியை வைத்து இதற்கு வாக்களியுங்கள் எனச் சொன்னால் தமிழர் அதற்கு வாக்களிப்பார்கள். ஆதைத்தான் செய்தும் உள்ளார்கள். ஆனால் முஸ்லிம்கள் அவ்வாறு காங்கிரசுக்கு வாக்களிக்க வில்லை நீ என் சமூகத்திற்கு என்ன செய்யப்போகின்றாய்? என்ற கேள்வியுடனேயே புள்ளடி போட்டுள்ளார்கள். ஆகவே ? ஹக்கீம் அரசுடன் இணைந்து ஆட்சியமைத்து முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவேண்டும். அந்த மக்களுக்கு தொழில்வாய்ப்புக்களை இலகு படுத்தவேண்டும், வைத்தியசாலைகளை தரமுயர்த்த வேண்டும், பாடசாலைகளை தரமுயர்த்தவேண்டும், முடிந்தால் ஒலுவில்மாதிரி இன்னுமொரு பல்கலைக்கழகமும் , துறைமுகமும் அமைக்க வேண்டும். இவை யாவும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள். ஆனால் தமிழ் மக்களின் அபிலாஷை யாதெனில் எங்களுக்கு அரிசியும் பருப்பும் வேண்டாம் எங்களை சம்பந்தனும் அவரது அடிவருடிகளும் ஆட்சி செய்ய வேண்டும் என்பது. ஆனால் அரிசியும் பருப்பும் வேண்டாம்தானே சம்பந்தன் சர்வதேசத்திடம் வாங்கித்தருவார் என குறைந்தது 3 மாதத்திற்காவது மானியங்களை அரசாங்கம் நிறுத்தினால் எப்படி இருக்கும்?

எது எவ்வாறாயினும் ஒப்பறேசன் சக்சஸ் பேசன் டெட். மாகாண சபையில் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புக்காரர்கள் 11 பேரும் சீண்டத்தகாதவர்கள், இவர்களுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்பெதல்லாம் இந்த ஜென்மத்தில் நடக்கப்போகின்ற விடயங்கள் இல்லை.

சம்பந்தன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டாட்சி அமைப்தற்கு பேசினாராம், அவர்கள் சம்பந்தத்திற்கு ஓமாம், ஐயா சம்பந்தா! நீ பழுத்த அரசியல்வாதி ஐயா, உனக்கு தெரியும்தானே, அப்படி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தால் அதற்கான நிதி வழங்கள் மத்தியிலிருந்து வரவேண்டுமென்பதும், ஒரு வருடத்திற்கு பின்னர் ஆழுநர் சபையை கலைக்கலாம் என்பதும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்றால் ஏன் ஐயா சம்பந்தா ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முடியாது.

தங்களின் எதிர்ப்பு அரசியல் தெப்பிராட்டியம் இன்று கிழக்கு மாகாண சபையில் போணஸ் ஆசனம் ஒன்று கிடைத்தால் 17 இரண்டும் கிடைத்தால் 18 தொப்பிக்காரரை உக்கார வைத்துள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது இலங்கை அரசின் அரசியல் யாப்பும் மற்றும் தேர்தல் விதிகளுக்கு ஏற்ப முஸ்லிம் தரப்பு வகுக்கும் வியூகங்கள். இவ்வியூகங்களின் ஊடாக அதிகூடிய ஆசனங்களை பெற்று பேரம்பேசும் சக்கியாக பரிணமிக்கின்றது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை நட்டாற்றில் விடும் நாசகாரர்கள் என்பதை தமிழ் சமூகம் ஏற்க மறுக்கின்றது.

நடக்கப்போது என்ன நாளை பேசுவோம்..
.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com