பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் காத்தான்குடி நகரசபையிலிருந்து மீளழைப்பு
– புதிய நகரசபை உறுப்பினராக சூறாசபை உறுப்பினர் MHA.நஸீர் நியமனம்-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மீளழைத்தல் கொள்கைக்கமைவாகவும், சூறாசபையின் தீர்மானத்துக்கமைவாகவும் காத்தான்குடி நகரசபை உறுப்பினராக கடமையாற்றி வந்த பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் அவர்கள் 28.09.2012 முதல் தனது நகரசபை பிரதிநிதித்துவத்தினை இராஜினாமாச் செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமாக் கடித்தத்தினை நேற்றிரவு இடம்பெற்ற மாதாந்த அங்கத்தவர் ஒன்று கூடலின்போது PMGG யின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தெளஸ் நளீமி அவர்களிடம் கையளித்தார்.
தொடர்ந்து மேற்படி வெற்றிடத்திற்கு புதிய நகரசபை உறுப்பினராக காத்தான்குடி 06ம் குறிச்சியைச் சேர்ந்த சகோதரர் MHA.நஸீர் அவர்களை நியமிப்பதற்கு சூறாசபை முடிவு செய்துள்ளதாக சூரசபை அமீர் இதன்போது தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சகோதரர் MHA. நஸீர் அவர்கள் உரையாற்றினார்.
அவர் தமதுரையில், “தான் ஒரு சாதாரண அங்கத்தவராகவே இந்த இயக்கத்தில் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன். என்னை இப்பதவிக்கு இயக்கம் அடையாளம் கண்டு எனக்கு வழங்கியுள்ள அமானிதத்தினை மிகச் சரியாக நிறைவேற்ற அல்லாஹ் எனக்கு அருள் பாலிக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
அத்தோடு இது படித்தவர்களின் இயக்கம் என்ற ஒரு மாயை இருக்கிறது, அப்படியல்ல கடந்த 6 வருடங்களாக இவர்களோடு இணைந்து சூறாவில் இருந்து நான் செயற்பட்டு வருகிறேன்.
இங்கு அவ்வாறான எவ்வித வேறுபாடுகளையும் நான் காணவில்லை. இரகசிய வாக்கெடுப்புக்கள் நடத்தப்படும் போதெல்லாம் நானும் வாக்குரீதியாக முன்னிலைப்படுத்தப்பட்டே வருகிறேன்.
இது சூறா என்மீது வைத்துள்ள நம்பிக்கையையும், என்னைச் சரியாக அடையாளங்கண்டுள்ளமையையுமே காட்டுகிறது. இன்ஷா அல்லாஹ் இவ் அமானிதத்தினை நான் சரியாக மேற்கொள்ள நீங்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, ஆலோனைகளையும் வழங்கவேண்டும் எனவும் வேண்டுகிறேன்.” எனத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment