கூகுள்(Google) மீது சீற்றம் கொள்ளும் விமல் வீரவன்ச
உலகில் உள்ள முஸ்லிம்கள், அமெரிக் காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு கூகுள் (Google) நிறுவனமே காரணம் என்று, அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாகாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இணையத்தளங்களின் தேடல் இயந்திரமான கூகுளை அமெரிக்கா ஒழுக்க நெறி முறைகளை மீறி, தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவே இயக்கி வருகின்றது எனவும், உலக நாடுகளின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது எனவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையில் உள்ள இணையத்தள பாவனையாளர்கள் கூகுளில் குறித்த திரைப்படத்தை பார்க்க முடியாதவாறு தணிக்கை செய்யவேண்டும் எனவும் அவர் இந்த சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment