கிழக்கின் எங்களது முதலமைச்சர் யார் என்பதை, நாங்கள் அறிவிக்கவுள்ளோம்.
கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணி 22 ஆசனங்களுடன் ஆட்சி அமைக்கும் எனவும் அதன் பின்னர் அதன் முதலமைச்சர் யார் என்பதை மக்களுக்கு அறிவிப்போம் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகாவெலி நிலையத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவிததுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் மூன்று மாகாண சபை தேர்தல்களில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டுமென்பதை, ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பம் முதலே அறிந்து வைத்தது. இதனடிப்படையிலேயே அக்கட்சி தேர்தல் வேண்டாமென, நீதிமன்றம் சென்றதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த தேர்தலின் ஆரம்பம், அதாவது தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தோல்வியடையுமென்பதை, அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். இதற்கு சிறந்த சான்றாக அமைவது, தேர்தலை நடாத்த வேண்டாமென அவர்கள் நீதிமன்றம் சென்று ஒரு தடையுத்தரவை பெற்றுக்கொள்ள முயற்சித்தமை, அவர்களால் வெற்றிபெற முடியாது என்பதை, அவர்கள் இதனூடாக நிரூபித்து விட்டார்கள். ரணிலுக்கு முடியாது என்பதை போன்று, சஜித்தினாலும் முடியாது என்பதை, இம்முறை தேர்தல் நிரூபித்து விட்டது. ரணிலுக்கும் முடியாது, சஜித்திற்கும் முடியாது எனவே எதிர்கால தேர்தல்களுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி பிறிதொரு தலைமைத்துவத்தை நாட வேண்டியுள்ளது.
திஸ்ஸ அத்தநாயகவின் கருத்துப்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆட்சி அமைப்பதற்கு உதவி வழங்குவதாக அவர் கூறியிருந்தார்கள். அவ்வாறு ஆட்சியமைக்க முடியாது. அவ்வாறு ஆட்சியமைக்க முடியாவிட்டாலும், இந்த முயற்சி தொடர்பாக, நாங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ரணில் விக்ரமசிங்க 2002 ஆம் ஆண்டு பிரபாகரனுடன், அன்று ஒரு ஒப்பந்தத்தில கைச்சாத்திட்டார். அந்த ஒப்பந்தத்தில், கடலில் மூன்றில் இரண்டு பகுதியும், நாட்டின் தரைப்பகுதியில் மூன்றின் ஒரு பகுதியும், அவர்களது நிர்வாகத்திற்கு ஒப்படைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரபாகரன் முன்னெடுத்த ஈழ ரச்சியத்திற்கு ஆதரவு வழங்குங்கள் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில், தமது சுலோகத்தை முன்னெடுத்தது. அந்த ஈழ ராச்சியத்தை உருவாக்குவதற்கு வழங்கும் ஆதரவிற்கா, இந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 4 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கப் போகின்றார்களா என கேள்வியை, நான் திஸ்ஸ அத்தநாயகவிடம் கேட்க விரும்புகிறேன். திஸ்ஸ அத்தநாயகவின் இந்த கூற்றும், அவர் அனுப்பியுள்ள கடிதத்திற்கும், பிரதி தலைவர் சஜித் பிரேமதாச இணக்கமா என்று கேட்க விரும்புகின்றேன்.
சில கட்சிகள், தமிழ் முதலமைச்சர் என்ற கோசத்தை எடுத்துச்சென்றார்கள். முஸ்லிம் முதலமைச்சர் என்ற கோசத்தை சிலர் எடுத்துச்சென்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சி, சிங்கள முதலமைச்சர் என்ற கோசத்தை, அம்பாறையில் முன்னெடுத்தார்கள். ஆனால், நாங்கள் கூட்டமைப்பு என்ற வகையில், கிழக்கிற்கு ஒரு முதலமைச்சர் என்ற கோசத்தையே முன்னெடுத்தோம்.
மேலும் சிலர், நாங்கள் 9 ஆம் திகதி ஈழ போராட்டத்தின் 4ஆம் கட்டத்தை முன்னெடுப்போமென, கூறினார்கள். ஈழ போராட்டத்திற்கு இறைவன் வழங்குகின்ற இறுதி சந்தர்ப்பம் இதுவென, அவர்கள் கூறினார்கள். எதுவித அச்சமுமின்றி கூறினார்கள். இறைவன் வழங்கிய ஆணை என்ன இந்த சந்தர்ப்பத்தில்.... அவ்வாறு கூறிய கட்சிக்கு, 31 சதவீத வாக்குகளே, கிழக்கு மாகாணத்தில் கிடைத்துள்ளது. இறைவனிடம் கேட்ட விருப்பத்தை, மக்களில் 69 சதவீதத்தினர் நிராகரித்து விட்டனர். மூன்றில் இரண்டு பங்கினர், அதனை நிராகரித்து விட்டனர்.
கிழக்கு மாகாண சபையில், நிச்சயம், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே ஆட்சியமைக்குமென, கூட்டமைப்பின் பொது செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார். மகாவெலி நிலையத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனை தெரிவித்தார்,
கிழக்கு மாகாணத்தின் போனஸ் ஆசனங்களுடன் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை, 37 ஆகும். இந்த 37 இல் 14 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு தெளிவாக கிடைத்துள்ளது. 12 ஆசனங்களுடன் இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைத்துள்ளன. கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தேசிய சுதந்திர முன்னணி. அவர்களுக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. கூட்டமைப்பின் மற்றொரு பங்காளி கட்சியே ஸ்ரீ லஙகா முஸ்லிம் காங்கிரஸ். அவர்களுக்கு 7 ஆசனம் கிடைத்துள்ளது. இவையனைத்தும் சேர்க்கப்பட்டால், மொத்தம் 22 ஆகும். பெரும்பான்மை என்பது, 19 ஆகும். ஆனால் இங்கு மேலதிகமாக, 3 ஆசனங்களும் உள்ளன. இதனால் அதிகாரத்தை, எவருக்கும் கோர முடியாது. எமது பங்காளி கட்சிகளின் இணக்கப்பாட்டுடன், எங்களது முதலமைச்சர் யார் என்பதை, நாங்கள் அறிவிக்கவுள்ளோம். அதன் பின்னர், நாங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பதை, வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்..
0 comments :
Post a Comment