சப்ரகமுவ முதலமைச்சராக மஹிபாலவும் வடமத்திய முதலமைச்சராக ரஞ்சித்தும் நியமனம்
வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். அண்மையில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் 3 மாகாணங்களில் தெரிவான ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற பதவியேற்பு வைபவத்தில் சத்தியபிரமாண செய்து கொண்டனர்.
3 மாகாணங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலை இன்று சத்தியபிரமாணம் மேற்கொண்டனர். கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரும் இன்று முதலமைச்சராக சத்தியபிரமாணம் செய்து கொண்டார். அத்துடன் சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக மீண்டும் மஹிபால ஹேரத்தும் வடமத்திய மாகாண முதலமைச்சராக எஸ்.எம்.ரஞ்சித்தும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
0 comments :
Post a Comment