தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம்! சம்பந்தனிடம் பிள்ளையான் வேண்டுகோள்
தமது சுய இலாபங்களுக்காகவும், தமது பிள்ளைகளின் சொகுசு வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் மீண்டும் பயங்கவாதப் போராட்டம் இடம் பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர், என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது ஊடகவிளார் மகாநாட்டில் கருத்து தெரிவி க்கும் பேதே அதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சராக என்னை நியமிக்கவே ஜனாதிபதி விரும்பினார். எனினும் தமிழர்களின் பெரும்பான்மை வாக்கு ஆளும் கட்சிக்கு கிடைக்கவில்லை, எனவே ஏனைய கட்சிகளுடன் இணைந்தே ஆட்சியமைக்க வேண்டி ஏற்பட்டது. எனினும் எனக்கு வாக்களித்த கிழக்கு மாகாண மக்கள் எவ்விதத்திலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிப் பதற்கான ஆலோசகராவே ஜனாதிபதி என்னை நியமித்துள்ளார் அதன் மூல் என்னால் முடிந்த பங்களிப்பை செய்வேன் என தெரிவித்துள்ளார்.
அத்துடன்,முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல, தமிழரசுக் கட்சியும் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்குப் போடவேண்டாம் என்றே பிரச்சாரம் செய்தனர். சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் அடைக்கலநாதன் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தின் போது இவ்வாறே செயற்பட்டனர் .எனினும் இத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியில் எனக்கு சுமார் 30,316 பேர் வாக்களித்துள்ளார்கள் என்றால், அதுவும் பெரும் சவால் தான். மேலும் 15,000 வாக்குகளைப் பெற்றிருந்தால் நானும் முதலமைச்சராகி இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
மேலும்,சம்பந்தன் போன்றவர்கள் அரசை தோற்கடிக்க வேண்டும் என்றே கோஷம் எழுப்பினார்கள். இவ்வாறு தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என்று நான் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். தமிழ் ஊடகங்களும் தேர்தலின் போது தமிழரசு கட்சிக்கு கண் மூடித்தனமான ஆதரவை வழங்கியது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் நடுநிலை போக்கை கடைபிடிக்க வேண்டும் என பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment