காமப்பசிக்கு இரு குழந்தைகளை பலி கொடுத்து ஆபத்தான நிலையில் தாய்!
கொடகாவெல்ல பிரதேசத்தில் 12 , 5 வயதுடைய இரு பச்சிளங்குளந்தைகள் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகி யுள்ளனர். அம்மாவுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த 19 வயது இளைஞன் ஒருவனால் இவர்கள் குத்திக்கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பெண்ணின் கணவர் ஜா-எல பிரதேசத்தில் வேலை செய்கின்றார். மாதத்தில் ஒருதடவை வீடுவருவார். அவர் வருவதற்குள் தாயார் 19 வயதான தனது சகோதரன் முறையான இளைஞனுடன் களவு செய்து வந்துள்ளார்.
களவு நடந்து கொண்டிருந்தபோது படுக்கை அறையினுள் நுழைந்த இரு சிறுவர்களும் சம்பவத்தை கண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞன் குசினிக்குள் நுழைந்து அங்கிருந்து கத்தியை எடுத்துவந்து இரு குழந்தைகளையும் குத்தி விட்டு தாயையும் குத்தியுள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்படும் வழியல் உயிரிழந்துள்ளார். தயார் ஆபாத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வருகின்றார்.
கொலையாளி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment