றிசாட்டின் வழக்கு தொடர்பில் அவதானிப்பதற்காக சர்வதேச சட்டத்தரணிகள் இலங்கை வருகை
மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை கண்காணிப்பதற்கு ஜெனீவாவிலுள்ள சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதியும், மேற்கு அவுஸ்திரேலியாவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான மார்க் டிரவல், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
மன்னார் நீதிமன்ற நீதவான் மீதான அச்சுறுத்தல் மற்றும் நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது மேற்கொள்ளப்படும் நீதிமன்ற விசாரணை தொடர்பில் அவதானிப்பதற்காகவே இவர் விஜயம் செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று மன்னார் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. அத்துடன் இது தொடர்பான முழுமையான அறிக்கையினை ஜெனீவாவிலுள்ள சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment