இராணுவம் தமிழருக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை.
யுத்தம் தமிழருக்கு எதிராக நடாத்தப்படவில்லை என்றும், அது பயங்கரவாதிகளான எல்.ரி.ரி.ஈ. யினருக்கு எதிராகவே நடாத்தப் பட்டது என்று, யாழ்ப்பாணம் சென்றுள்ள ஐ.நாவின் மனிதவு ரிமை குழுவினரிடம் யாழ் .பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு, மற்றும் வட ஆபிரிக்க கிளைகளுக்கான ஐ.நா.மனிதவுரிமை அலுவலகத்தின் தலைவர் ஹன்னி தலைமையில் யாழ்ப்பாணம் சென்ற குழுவினரிடமே ஹத்துருசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், போரின் காரணமாக மக்கள் பெரும் துன்பப்பட்டார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகளை நாங்கள் அடையாளம் கண்டு அதற்கான பரிகாரங்களைச் செய்து வருகின்றோம். பல சமூக நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். முன்னாள் எல்.ரி.ரி.ஈ யினருக்கு புனர்வாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றோம். வறியவர்களுக்கு வீடும், ஏழை மாணவருக்கு புலமைப் பரிசில்களை வழங்குகின்றோம் எனவும், ஐ.நா குழுவினரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வடமாகாணத்தில் தற்போது குடியியல் ஆட்சிக்கான வேர் பிடித்துள்ளது என்றும், ஒப்பீட்டளவில் மற்ற மாகாணங்களைவிட குறைந்த தொகையினரே வடமாகாணத்தில் இருகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment