Friday, September 21, 2012

பில் கிளிண்டனுடனான 'கசமுசாக்களை' புத்தகமாக வெளியிடும் மோனிகா லெவின்ஸ்கி!

முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுடனுக்கு தான் உதவியாளராக இருந்தபோது தங்களுக்குள் இருந்த உறவு குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட முடிவு செய்துள்ளார் மோனிகா லெவின்ஸ்கி. பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக வெள்ளை

மாளிகைக்கு வந்தவர் மோனிகா (39). அவரை தனது உதவியாளராக வைத்துக் கொண்டார் கிளிண்டன். அப்போது அவருக்கும், கிளிண்டனுக்கும் இடையே கசமுசா உறவு ஏற்பட்டது. கடந்த 1998ம் ஆண்டு இந்த விவகாரம் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில் மோனிகா தனக்கும், கிளிண்டனுக்கும் இருந்த உறவு குறித்து புத்தகம் எழுதி வெளியிட முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அந்த புத்தகத்தில் கிளிண்டன் தனது மனைவிக்கும், தனக்கும் இடையே இல்லாத செக்ஸ் வாழ்க்கைப் பற்றிக் கூறியதும், ஹில்லரியை கோல்ட் ஃபிஷ் (cold fish) என்று கூறியது குறித்தும், ஒரே நேரத்தில் மூன்று பேர் சேர்ந்து செக்ஸ் உறவு கொள்வது குறித்த கிளிண்டனின் ஆர்வம் குறித்தும் எழுதவிருக்கிறாராம். இது தவிர அவர் கிளிண்டனுக்கு எழுதிய காதல் கடிதங்களையும் வெளியிடுகிறாராம்.

தனக்கும், கிளிண்டனுக்கும் இடையே நடந்த கசமுசா பற்றி ஒளிவு மறைவின்றி எழுதப் போகிறாராம். அதனால் இந்த புத்தகம் எப்போது வெளிவரும் என்று பலரும் இப்போதே கேட்கத் துவங்கிவிட்டனர். இந்த புத்தகம் வெளியாகி விற்பனையில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல கோடி ரூபாய்க்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com