சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்ட்டது. (படங்கள் இணைப்பு)
இந்திய விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நிர்மாணிக் கப்படவுள்ள பௌத்த பல்கலைக் கழகத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அனைத்து மக்களும் மதங்களுக்கிடையே போட்டி பொறாமைகளை மறந்து சகிப்புத் தன்மையுடன் வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிற மதத்தவரிடம் பகைமை, வெறுப்பை காட்டுவதனால் அது வன்முறைக்கு இட்டுச் செல்லும் எனவும், இதனைக் கைவிட்டு எல்லாரும் சகிப்புத் தன்மையுடன் வாழ்வது சமாதானத்திற்கு வழி வகுக்கும் எனவும், பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலகில், அன்பு, அமைதி, பாசம் மற்றும் அகிம்சை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் இந்தியாவில், பௌத்த மதச் சிந்தனைக்கு, புத்துயிர் கொடுத்தவர், டாக்டர் அம்பேத்கர். அவரது அரும்பணியால், நாட்டின் ஆட்சி முறையில், பௌத்த, இந்து மதங்களிடம் சிறந்த கருத்துக்கள் புகுத்தப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment