ஜெனிவாவில் பதுங்கும் இலங்கைப் புலனாய்வாளர்கள்.
இலங்கையில் புலிகளை துவம்சம் செய்த இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எதிர்காலத்தில் புலிகள் தலைதூக்குவதற்கோ அன்றில் புரட்சி ஒன்று எழுவதற்கோ இடமளிக்கப்போவதில்லை என திடகாத்திரமாக தெரிவித்துள்ளனர். இதேநேரம் புலம்பெயர் நாடுகளில் புலிகளின் எச்சசொச்சங்களின் செயற்பாடுகள் இலங்கையின் இறைமைக்கு குந்தகமாகவே அமைகின்றது என்றும் அச்செயற்பாடுகள் இலங்கையின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கின்றது எனவும் அரசு வெளிப்படையாகவே குற்றஞ்சுமத்தி வருகின்றது. .
இந்நிலையில் நாளை மறுதினம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள பொங்குதமிழ் நிகழ்வினை மிகுந்த சந்தேக கண்கொண்டு பார்க்கும் இலங்கைப் புலனாய்வுத் துறையினர், நிகழ்வினை கண்காணிப்பதற்காக ஜெனிவா சென்றடைந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இலங்கையிலிருந்து சென்றுள்ள அணியுடன் ஐரோப்பிய நாடுகளில் நிலைகொண்டுள்ள புலனாய்வு முகவர்களும் இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது. .
புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் புலம்பெயர் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து சென்றனர். இவர்களில் பலர் புலிகளுக்கு நிதி வழங்கியவர்கள் என்பதும் புலிகளின் ஊர்வலங்கள் மற்றும் செயற்பாடுகளில் பங்கெடுத்தவர்கள் என்பதும் தெட்டத்தெளிவாக தெரிந்திருந்தும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேநேரம் 2009 மே இற்கு பின்னர் புலம்பெயர் தேசத்தில் செயற்படுகின்றவர்கள் இனம்காணப்பட்டு அவர்களது விபரம் நாட்டுக்குள் நுழைய முடியாதவர்களுக்கான கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள் சிலர் விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்கள் குறிப்பிடத்தக்களவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் ஜெனிவாவில் களமிறங்கியுள்ள புலனாய்வாளர்கள் நிகழ்வில் கலந்து கொள்கின்றவர்களை துல்லயமாக இனம்கண்டு அவர்கள் மீதான அதி உச்ச நடவடிக்கைக்கு தயாராகலாம் என நம்பப்படுகின்றது.
எது எவ்வாறாயினும் புலம்பெயர் புலிகள் பல பிரிவுகளாக பிளவு பட்டுள்ளனர். இவ்வாறு பிளவு பட்டுள்ள அநேகர் இலங்கை அரசுடன் ஏதோ ஒரு வழியில் தொடர்புகளை பேணி வருகின்றனர். இவர்கள் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக மறு தரப்பை காட்டிக்கொடுத்தும் வருகின்றனர். இவ்வாறான காட்டிக்கொடுப்புக்களுக்கு எவ்வித பயனும் எதிர்பாராமல் தமிழ் உணர்வோடு குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொள்ளும் அப்பாவி மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படக்கூடாது என்பதே எமது கருதுகோள்.
இந்நிலையில் அண்மையில் நெடியவன் தரப்பினரால் வெளியிடப்படும் கறுப்பு எனும் பத்திரிகையின் ஒரு பக்கத்தை இங்கு வெளியிடுகின்றோம். புலிகள் இவ்வாறு பிளவுபட்டு மாறி மாறி காட்டிக்கொடுக்கின்ற நிலையில் மக்கள் இவர்களின் பின்னால் செல்வதில் பயன் ஏதும் உண்டா என்பதை சுயமாக சிந்திக்க விடுகின்றோம் .
சுவிசில் மீண்டும் கே.பி கும்பல்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைக்குள் குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் கே.பி குழுவினர் இறங்கியிருப்பது தொடர்பான முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
சுவிஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து கே.பியின் விசுவாசியான குலம் என்ற தேசத்துரோகி அகற்றப் பட்டதை அடுத்து கிளையின் தலைமைப் பொறுப்பிற்காக நாற்காலிச்சண்டையில் ஈடுபட்ட புகைப்படப்பிடிப்பாளர் ஒருவரே இக்குழப்பத்தின் சூத்திரதாரி எனத் தெரியவருகின்றது.
இது தொடர்பான முழுமையான தரவுகள் எம்மால் திரட்டப்பட்டு வருகின்றன. தகவல்கள் முழுமைப்படுத்தப்பட்டதும் அவை மக்களிடம் வெளிக்கொணரப்படும் என்பதை
அறியத் தருகின்றோம்.
மேலே உள்ள முற்றிலும் புலிகளின் செய்தித்தாள் செய்தி.
என்ன நடக்குதுங்க, யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கோ..
0 comments :
Post a Comment