எல்.ரி.ரி.ஈ இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கை களில் ஈடுபடுகின்றனர்- உள்துறை அமைச்சு
எல்.ரி.ரி.ஈ அமைப்பிற்கு இந்தியாவில் உள்ள தடையை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. அவர்களின் செயற்பாடுகள் இந்தியாவில் இன்னமும் செயல்பட்டு வருவதாகவும், உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்தியாவில் எல்.ரி.ரி.ஈ இயக்கம் சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அந்த தடையை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து, நீதிபதி ஆர்.கே. ஜெயின் தலைமையிலான நீதிமன்றம் இன்று சென்னையில் விசாரணை நடத்தியது.
உள்துறை அமைச்சின் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், "விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு சட்டவிரோத அமைப்புகள் ஆதரவாக செயல்பட்டு வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment