பொலிஸார் தாக்கினால் திருப்பித் தாக்குவோம் – கே. டி. லால்
இம்முறை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ரூபா 21052/= சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தேசிய தொழிற் சங்க கூட்டமைப்பின் தலைவர் கே. டி. லால்காந்த தெரிவித்துள்ளார். 2005ம் ஆண்டு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வாழ்க்கைச் செலவு மிக மிக அதிகமாக உயர்ந்து சென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீதியான முறையில் நடைபெறும் தொழிற் சங்கப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைப் பொலிஸார் தாக்கினால் அவர்களைத் திருப்பித்தாக்க வேண்டியேற்படும் எனவும், தொழிற் சங்கப் போரட்டத்தை அடக்க முனையும் பொலிஸாருக்குப் பயப்படத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment