Friday, September 7, 2012

மிருக பலியைத் தடுப்பது சமய சுதந்திர மீறல் அல்ல - ஜாதிக ஹெல உருமய.

சிங்கள பௌத்த நாடான இலங்கை, பௌத்த போதனைகளுக்கு அமைய மிருகங்களை பாதுகாக்கும் உரிமை யைக் கொண்டுள்ளதால், நாங்கள் மிருகங்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது என்றும், மிருக பலிக்கு எதிரான தடையைக் கொண்டுவர நாங்கள் முன்னிற்போம் என்றும், பல நாடுகள் மிருக உரிமையைப் பாதுகாக்க கடுமையான சட்டங்களைக் கொண்டிருக்கின்றன என்று ஜாதிக ஹெல உருமயவின் பேச்சாளர் நிசாந்த வர்ணசிங்க சிங்குவா செய்திக்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியும், பிரதான பௌத்த கட்சியுமான ஜாதிக ஹெல உருமய, பாராளுமன்றத்தில் மிருக பலிக்கு எதிரான பிரேரணையைக் கொண்டு வர ஆயத்தம் செய்வதாகவும், அது தொடர்பில் மிருக பலியைத் தடை செய்துள்ள பல இந்திய மாநிலங்களின் சட்டங்களை ஆராய்ந்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மிருக பலியைத் தடை செய்வதானது மற்ற சமயங்களின் உரிமையைப் பாதிப்பதாக அமையாது என்று நிசாந்த மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

வழக்கமாக பெருந்தொகையான மிருக பலி நடக்கும் முன்னேஸ்வரம் கோயிலில், ஜனாதிபதியின் கோரிக்கையினை அடுத்து இம்முறை அம்மிருகப் பலி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com