இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சியில் பௌத்த கற்கைகள் நிலையம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக செப்டம்பர் பிற் பகுதியில் இந்தியாவுக்குச் செல்ல விருக்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
செப்டெம்பர் 21ல் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பூட்டான் பிரதமர் லியொங்போ ஜிக்மே தின்லி, மற்றும் இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சிவராஜூம் கலந்து கொள்வார்கள் என்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
100 ஏக்கர் காணியில் அமையும் இந்த நிலையம், உலகெங்கிலும் இருந்து பௌத்தம் பற்றி கற்க வருவோரின் மத்திய நிலையமாக இது திகழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment