Friday, September 28, 2012

அமெரிக்காவுக்கு பேரிடியை ஏற்படுத்திய படத்தை தயாரித்த நபர் கைது! பிணை வழங்க மறுப்பு

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் திரைப்படம் தயாரித்த அமெரிக்க தயாரிப்பாளரான நகௌலா பெஸ்லி நகௌலா விற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தலைமறை வாகியிருந்த திரைப்படத் தயாரிப்பாளர் நகௌலா நேற்றையதினம் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டார் அவரை சமஷ்டி நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது பிணை வழங்க நீதவான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்டதன் மூலம் உலகில் அமைதியின்மை ஏற்படுத்தியமைக்காக பிணை வழங்க முடியாதென நீதவான் குறிப்பிட்டுள்ளார். எகிப்து நாட்டில் பிறந்த 55 வயதான நகௌலா பெஸ்லி "இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்" எனும் 14 நிமிடங்கள் முன்னோட்ட குறும்படத்தை தயாரித்துள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டு எதிர்ப்புகள் கிளம்பியதும் அவர் தலைமறைவாகியுள்ளதாக அமெரிக்க பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மிக குறைந்த செலவில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜீலை மாதம் திரைப்படம் "யூடிப்" இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பான எதிர்ப்புகள் கடந்த ஒரு மாதகாலமாக உலககெங்கிலுமுள்ள நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனால் பலர் பலியாகியுள்ளனர். இதேவேளை கடந்த 2010 ஆம் ஆண்டு வங்கி கொள்ளை குற்றச்சாட்டில் நகௌலா கைதுசெய்யப்பட்டு 21 மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவருக்கு 5 வருடகாலத்திற்கு கணனி மற்றும் இணையத்தளத்தை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திரைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டதன் மூலம் ஏற்கனவே உள்ள நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com