கப்பம் வாங்கிய பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர் கைது .
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். பஸ் உரிமையாளர் ஒருவருக்கு விசேட சலுகை அடிப்படையில் றூட் லைசன் வழங்கும் நோக்கில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை அதிகார சபையின் தலைவர் இலஞ்சமாகப் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளதாக ஆணைக்குழு
உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இலஞ்சத் தொகையை நேற்றுக்காலை கண்டியில் வைத்துப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment