இலங்கையில் போர் நடைபெற்ற காலத்திலும், போர் முடிவுற்ற தருணத்திலும், அதன் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில், விசாரணை செய்ய பன்னாட்டு விசாரணைக் குழுவை நியமிக்க ஐ.நா-வை வலியுறுத்த வேண்டுமென்ற பிரேரணையை, அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் 7ம் திகதி அமெரிக்க காங்கிரசில் முன்மொழிவு செய்திருக்கிறார்கள்.
இதை முறியடிப்பதற்கு பிரதிநிதிகள் சபையில் தமக்கு ஆதரவாக உள்ளவர்களை ஊக்குவிக்க, வாசிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமதுங்க முயற்சி செய்கின்றார் என்று வெளிநாட்டமைச்சின் செயலாளர் கருணாதரத்ன அமுனுகமை தெரிவித்துள்ளார்.
அதிக ஊடக சுதந்திரம் வழங்கல், மனிதாபிமான அமைப்புகள், ஊடகத்தினர் மற்றும் பன்னாட்டு உரிமைக் குழுவினர் போர் நடைபெற்ற பிரதேங்களுக்குச் செல்லவும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள எல்.ரி.ரி.ஈ-யிரைச் சந்திக்கவும் அனுமதியளுக்குமாறு இலங்கையை பன்னாட்டுச் சமூகம் ஊக்குவிக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரசின் முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இன்நிலையில், உலக நாடுகளின் உயர் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கையில் இடம்பெற்றுள்ள அபிவிருத்தி பணிகளையும், இலங்கையில் சகல இன மக்களும் இன ஜக்கியத்துடன் வாழ்வதை கண்டு இலங்கை அரசாங்கத்திற்கு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து செல்கின்றனர்.
No comments:
Post a Comment