சுன்னாகத்தில் அனல் மின் உற்பத்தி நிலையம்
யாழ் குடாநாட்டில் அனல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 20 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் யாழ் குடாநாட்டின் சுன்னாக பிரதேசத்தில் இப்புதிய அனல் மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப் படுகின்றது.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஆலோசனையின் பிரகாரம், இலங்கை மின்சார சபையின் லக்தனவு நிறுவனம் இத்திட்டத்திற்காக 4 ஆயிரம் மில்லியன் ரூபாவை முதலீடு செய்யவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இத்திட்டம் பூர்த்தி செய்யப்படவுள்ளதுடன் ,8.6 மெகாவோட் சக்தியை கொண்ட 3 அனல் மின் பிரபாக்கிகள் இங்கு பொருத்தப்படவுள்ளது எனவும், யாழ் குடாநாட்டில் மின் உற்பத்தியை சீராக முன்னெடுப்பதும், கிளிநொச்சி சுன்னாகம், பிரதேசத்திற்கான அதி சக்தி வாய்ந்த மின் விநியோகத்தை மேம்படுத்துவதும், தற்போது வடபகுதிக்கு 78 வீதமான மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனை நூற்றுக்கு நூறாக அதிகரிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment