பிரித்தனியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான இலங்கையர்
பிரித்தனியாவில் பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தனியாவின் டுரோட்டன் கீத் பகுதியைச் சேர்ந்த சிந்துஜன் திருஞானமூர்த்தி என்ற 22 வயதுடைய குறித்த நபர், பெண் ஒருவரின் ஆடையை தூக்கி அவரின் பின்புறத்தை பிடித்தாகவும், மற்றோரு பெண்ணின் கழுத்தை பிடித்து முத்தமிட முயன்றதாகவும், அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், கம்பேர்வல் நீதிமன்றில் ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆஜராகவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment