கொலம்பிய சிறையில் அழகிப் போட்டி.. கவர்ச்சியில் கலக்கும் பெண் கைதிகள்!
கொலம்பியா நாட்டுத் தலைநகர் பகோடாவில் உள்ள பெண்கள் சிறையில் அழகிப் போட்டி நடத்தப்படவுள்ளது. அதில் ஏராளமான பெண் கைதிகள் கவர்ச்சிகரமான உடையில் பூனை நடை போட்டும், நடனமாடியும் கலக்கத் தயாராகி வருகின்றனர். இவர்கள் அனைவருமே போதைப் பொருள் கடத்தல், திருட்டு, கொலை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிக் கைதாகி சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் ஆவர்.
வெளியில் நடக்கும் அழகிப் போட்டிகளுக்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் படு கவர்ச்சிகரமாகவும், ஒய்யாரமாகவும் பெண் கைதிகள் நடை போட்டு அசத்த தயாராகி வருகிறார்கள்,. தற்போது தீவிரப் பயிற்சி வகுப்புகள் இவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது.
பகோடாவில் உள்ள எல் புளூயன் பெண்கள் சிறையில்தான் இந்த அழகிப் போட்டி நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் பெண் கைதிகள் மறு வாழ்வுத் திட்டத்தின் கீழ் அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சிறையில் மொத்தம் 9 பிளாக்குகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் அதிகபட்சம் 250 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு பிளாக்கிலிருந்தும் ஒரு பெண் கைதி இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டு கடைசியில் இறுதிப் போட்டி நடைபெறும்.
இந்தப் போட்டி ஒரு நால், இரண்டு நாள் நடக்கும் நிகழ்ச்சியாக இல்லாமல், கிட்டத்தட்ட பல வாரங்களாகவே இதற்கான தகுதிப் போட்டிகள், பயிற்சி உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம். இதனால் இப்போட்டிகள் தற்போது கொலம்பியா மக்களை வெகுவாக கவரும் அழகிப் போட்டியாக மாறியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இந்தப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்து. தற்போது போட்டிக்காக அனைத்துப் பெண் கைதிகளும் தீவிர பயிற்சியில் உள்ளனர்.
0 comments :
Post a Comment