பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், சஞ்சீவ பண்டார கைது!
கோட்டை ஆர்ப்பாட்டத்தின் போது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்து, வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டின் பேரில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர், அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளரான சஞ்சீவ பண்டாரவை கைது செய்துள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்தது. பொது மக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில், வீதியை மறித்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனவும் இங்கு பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தி, வன்முறைக்கு வித்திட்டதனால், அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment