பயிலுனர்களாக சேர்ந்த பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குவது தாமதமாகும்
சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை பயிலுனர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க வேண்டாம் - சட்ட மா அதிபர் ஆலோசனை
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற் கிணங்க, பயிலுனர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை கொள்கைகளின் கீழ், நிரந்தர நியமனங்களை வழங்குவது பிற்போடப்பட்டுள்ளதாக, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த "அபிவிருத்து உத்தியோகத்தர் சேவை கொள்கைக்கு" எதிர்ப்பு தெரிவித்து, சிலர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், குறித்த சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென, சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கிணங்க நியமனங்கள் வழங்குவது பிற்போடப்பட்டுள்ளதாக, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதனால் பயிலுனர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்க்கான பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment