சர்வதேச பயங்கரவாத்திற்கு எதிராக சட்ட வரைமுறையை உருவாக்க வேண்டும்
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கூட்டு படைகளின் கட்டளை தளபதி ஏயார் சீப் மாசல் ரொசான் குணதிலக தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க கடந்த காலங்களை விட தற்போது வினைத்திறனான நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச பயங்கரவாத்திற்கு எதிராக சட்ட வரைமுறையை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் படை அதிகாரிகள் கலந்துகொண்ட கருத்தரங்கொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment