பணிப்புரைகளை முதலமைச்சர் பின்பற்றத் தவறினால், அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்!
இலங்கை மீதான நாட்டின் கொள்கையில் தலையீடு செய்வதை தமிழ்நாடு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மாநிலத்தில் சிங்களவரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு மத்திய அரசாங்கம் பணிப்புரை விடுக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி வற்புறுத்தியுள்ளர்.
பணிப்புரைகளைப் பின்பற்ற தமிழ்நாடு தவறினால், அதனை ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று புது டில்லியில் விடுத்த அறிக்கையொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் பணிப்புரைகளை பின்பற்றத் தவறினால், அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், இம்மாத இறுதியில் மத்திய பிரதேசத்துக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வரும் போது, ம.தி.மு.க தலைவர் வைகோ எதிர்ப்பு தெரிவித்தால், அவரை மத்திய பிரதேச அரசாங்கம் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment