Tuesday, September 18, 2012

இந்திய அரசிடம் குடியுரிமை கேட்கும் இலங்கை அகதிகள்

இந்திய அரசு தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகில இந்திய தமிழ் அமைப்புகள் நடத்திய மாநாடொன்று டில்லியில் இடம்பெற்ற போதே இக்கோரிக்கை விடப்பட்டுள்ளது

இதன்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி அமைப்பின் தலைவர் தெரிவிக்கையில், இலங்கையில் 1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் போது அகதிகளாக இந்தியா வந்த தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியாவை எங்களால் மறக்க முடியாது என்றும், அகதிகளாக தமிழகம் வந்து முப்பது வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம் என்றும், எங்களுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள், சலுகைகள் அளித்தாலும் குடியுரிமை, வாக்குரிமை, இல்லாததால் நாடற்றவர்களாக வாழ்ந்து வருகின்றோம் கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை என பலவற்றையும் முறைப்படி பெற முடியாத வர்களாக இருந்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

70,000 இலங்கை அகதிகள் இருக்கிறோம். இவர்களில் 32,000 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் இலங்கையில் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் இருந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் சூழல் மாறினாலும் அங்கே செல்ல விரும்பவில்லை.அகதிகளாக இங்கு வந்த பலரும் முதியவர்களாகிவிட்டனர் எனவும், அவர்களது குழந்தைகள் வளர்ந்துவிட்டனர். அவர்களுக்கு இலங்கையும், அங்கிருக்கும் பழக்கம், கலாசாரம் தெரியாது, இந்தியக் கலாசாரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டனர் எனவும், நாங்கள் இலங்கைக்குச் சென்றால் எங்களை இந்தியர்களாக பார்க்கின்றனர். இந்தியாவில் இருந்தால் அகதிகளாகப் பார்க்கின்றனர் எனவே எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆகவே இக்கோரிக்கையை மத்திய அரசு, மாநில அரசுக்கள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com