கிளின்டனின் காதல் லீலைகளை போட்டு உடைக்கின்றார் அவரின் முன்னால் காதலி
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுடன் நடத்திய காதல் லீலைகளை புத்தகத்தில் கொட்டித் தீர்க்க முடிவெடுத்துள்ளார், அவரின் முன்னாள் காதலி மோனிகா லெவின்ஸ்கி. அமெரிக்காவில், 1993 முதல், 2001ம் ஆண்டு வரை, ஜனாதிபதி இருந்தவர், பில் கிளின்டன். ஜனநாயக கட்சி சார்பில், பெருவாரியான வோட்டு வித்தியாசத்தில், ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளின்டன், இரண்டாவது முறையும், அதிபர் பதவியை கைப்பற்றி சாதனை படைத்தார்.
கிளின்டன் மீது மக்கள் வைத்த நம்பிக்கை அளப்பரியது. ஆனால், ஆட்சியின் கடைசி காலத்தில், செக்ஸ் புகாரில் சிக்கி, பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, சீரழியும் நிலைக்கு ஆளானார், கிளின்டன்.
அமெரிக்க ஜனாதிபதிகளில் ஆண்ட்ரூ ஜான்சனுக்கு பின், கண்டனத் தீர்மானத்தைச் சந்தித்த அடுத்த ஜனாதிபதி, பில் கிளின்டன் தான். புகழேணியில் இருந்து கிளின்டனை தடாலடியாக கீழே விழ வைத்தவர், அவரின் உதவியாளர், மோனிகா லெவின்ஸ்கி.
கடந்த, 14 ஆண்டுகளாக அமைதியாக இருந்த மோனிகா, இப்போது மீண்டும், பழைய செக்ஸ் புகாருக்கு புத்துயிர் கொடுக்க இருக்கிறார். கிளின்டனுடன் இருந்த அந்தரங்க உறவை, புத்தகமாக எழுதி, வெளிச்சம் போட்டு காட்டும் வேலையில், அதிரடியாக இறங்கி உள்ளார்.
புத்தகத்தில், கிளின்டனுடன் நடத்திய காதல் களியாட்டம், காதலின் உச்சத்தில் சொக்கிப்போய், அவருக்கு எழுதிய கடிதங்கள் என, எல்லாவற்றையும் அந்தரங்கமாக எழுதித்தள்ள திட்டமிட்டுள்ளார்.
இதற்கு முன் அளித்த பேட்டி எதிலும், மோனிகா, அந்தரங்க விஷயங்களை சொன்னதில்லை. கிளின்டனுடன் உறவை முறித்துக் கொண்ட பின், முதுகலைப் பட்டத்தை பெறுவதில் முனைப்பு காட்டினார். சிறிது காலம், பத்திரிகை ஒன்றில் நிருபராக பணியாற்றினார். அதற்கு மேல், பெரிதாக எதையும் அவரால் சாதிக்க முடியவில்லை.
இதனையடுத்து கிளின்டனை பழிவாங்க துடித்த, மோனிகா எடுத்த அதிரடி முடிவுக்குப் பலனாக, அவர் எழுதும் புத்தகத்துக்கு விலையாக, 160 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தன் மனைவி ஹிலாரியை, "உணர்ச்சி இல்லாத ஜடம்" என்று சொல்லி, கிளின்டன் சிரிப்பாய் சிரித்த கதையையும், மோனிகா, புத்தகத்தில் விவரிக்க உள்ளார்.
0 comments :
Post a Comment