இந்தியாவுக்கு போர் அச்சுறுத்தல் கொடுத்தார் பிரேமதாச - இந்தியத் தூதுவர் மல்கோத்ரா.
1989 ஆண்டு அமைதிகாக்கும் நோக்குடன் இலங்கை வந்த இந்தியப் படைகளை, இலங்கை யிலிருந்து உடனடியான இந்தியா மீள அழைத்துக்கொள்ளாவிடின், முற்றுகையிடப்பட்ட போர் வெடிக்கும் என்று, ஜனாதிபதி பிரேமதாச பயமுறுத்தியதாக இந்தியத் தூதராக இருந்த லகான் லால் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
அதற்கு அப்போது இந்தியத் தூதராக இருந்த நான், ஜனாதிபதியவர்களே நான் இங்கு சமாதானம் பற்றிப் பேச வந்துள்ளேன். ஆனால், உங்களுக்குப் போர் தேவையானால் அதைச் செய்யுங்கள் என்று திருப்பி பிரேமதாசவிடம் சொன்னதாகவும், அதன் பிறகு ஜனாதிபதி பிரேமதாச இரண்டு மூன்று நிமிடங்கள் மிரண்டு போய் இருந்ததாகவும், இந்தியத் தூதராக இருந்த லகான் லால் மல்கோத்ரா இந்திய வெளிநாட்டமைச்சு சஞ்சிகையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியப் படைகளை ஆக்கிரமிப்புப் படைகள் என்று தான் கூறினால், அது இந்தியாவின் கௌரவத்தைப் பாதிக்கும் என்று பிரேமதாச தன்னிடம் கூறியதாகவும், அதற்குத் நான், எங்கள் கௌரவத்தை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்று பிரேமதாசவிடம் கூறியதாவும், லகான் லால் மல்கோத்ரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தான் புலிகளை நம்பவில்லை என்றும், பிரேமதாச புலிகளை நம்புகின்றார் என்றும், ஆனால் பிரேமதாச தகுந்த பாடத்தை புலிகளிடமிருந்து படிப்பார் என்று ஜே.ஆர். ஜயவர்தனா தன்னிடம் கூறியதாகவும், லகான் லால் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment