இலங்கையரின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதி அளித்துள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்ட பின்னர், முதல் தடவையாக இது பற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ, இலங்கையரைப் பாதுகாக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு, இந்தியா சாதகமாகப் பதிலளித்திருக்கின்றது என்றும், தமிழ் நாட்டில் உள்ள ஒரு சிறு குழுவினரே இதைச் செய்திருப்பதாகவும், மத்திய அரசில் இருந்து இவர்களுக்கு எந்தவித உற்சாகமும் கிடைக்கவில்லையென்றும் கூறினார்.
அத்துடன் செப்டம்பர் 19ல் மத்திய பிரதேசம் சாஞ்சியில் உள்ள பௌத்த கற்கை மையத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவுக்குச் செல்லும் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment