பயணிகள் விமானத்துடன் விமானப் படைக் ஹெலிகாப்டர் மோதி விபத்து – சிரியாவில் சம்பவம்
சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகே, சிரிய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, 200 பயணி களுடன் பயணித்துக் கொண்டிருந்த, பயணிகள் விமானமென்றின் வால் பகுதியுடன் மோதி விபத்துக் குள்ளாகியுள்ளது.
இவ்வாறான விபத்துக்களில் இரண்டு விமானங்களும் நெறுங்கிச் சாம்பலாகும். ஆனால் தெய்வாதீனமாக பயணிகள் விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளதுடன், விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் மற்றும் விமானியின் நிலமை என்ன என்ற விபரம் இதுவரை தெரியவில்லை.
சிரிய உள்நாட்டு யுத்தத்தில், அன்நாட்டு யுத்த விமானங்கள் முழுமையாக பயன்படுத்தப்படுவதனால், தமது நாட்டு மக்களுக்கு எதிராக குண்டுவீச விரும்பதா விமானப்படை விமானிகள், விமானபடையிலிருந்து விலகி ஆர்பாட்டக் காரர்களுடன் இணைவதாகவும், இதனால் விமானப்படையில் விமானிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், இன்நிலையில், அனுபவமற்ற விமானிகளை வைத்து சிரிய அரசு ஹெலிகாப்டர்கள் இயக்குவதனால் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment