சகோதரரின் முதலமைச்சர் பதவிக்காக தனது அமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார் சந்திரசேன
தனது சகோதரர் எஸ்.எம். ரஞ்சித்திற்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுப்பதற்காக, கமநல சேவைகள் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்ததாக, அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாண மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கு, தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, தனது சகோதரர் எஸ்.எம். ரஞ்சித்திற்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்காக, மக்களுக்காக இந்த அர்ப்பணிப்பை செய்ததாகவும், சந்திரசேன தெரிவித்தார்.
அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களை தெரிவு செய்யும் கட்சியின் நடவடிக்கைக்குழு, ஒரு பிரேரணையை முன்வைத்தது. அதில் நான் ஒரு அமைச்சராக இருப்பதனால், எனது சகோதரருக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவது சிரமமென, குறிப்பிடப்பட்டது. தனக்கு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடியுமாகவிருந்தால், தனது சகோதரருக்கு முதலமைச்சர் பதவியை வழங்க முடியுமென, அந்த குழு சிபாரிசு செய்தது.
மக்கள் ஆணைக்கு தலைசாய்க்கும் நபர் என்ற வகையில், அவருக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டுமென்ற காரணத்தினால், நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன்.
ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தேன். எதிர்வரும் 24 ஆம் திகதி, எஸ்.எம். ரஞ்சித் வடமத்திய மாகாண முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். மக்களுக்காக நான் இதனை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment