Thursday, September 27, 2012

ஓபாமா மீது மடோனாவுக்கு உள்ள காதல்! ஓபாமாவுக்காக எல்லாவற்றையும் துறக்க தயாராம்

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, இரண்டாவது தடவையாக தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், என் ஆடைகளை களற்றி வீச தயார் என்று பிரபல பாப் இசை பாடகி மடோனா தெரிவித்ததனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வொஷிங்டனில் கடந்த திங்கள் கிழமை இரவு, பாப் இசை பாடகி மடோனாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ரசிகர்கள் மத்தியில் மடோனா உவையாற்றுகையில் 'வெள்ளை மாளிகையில் கறுப்பு முஸ்லிம் போல அதிபர் ஒபாமா இருக்கிறார். தேர்தலில் அவர் இரண்டாதவது முறையாக வெற்றி பெற்றால், எல்லாவற்றையும் துறக்க நான் தயார்" என பிரபல பாப் இசை பாடகி மடோனா தெரிவத்துள்ளார்.

மேலும் அவர் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமை களுக்காக போராடி வருகிறார். அதற்காக அவரை ஆதரித்து ஓட்டு போடுங்கள். நல்லதோ கெட்டதோ அவருக்கு ஓட்டு போடுங்கள். அவர் நாட்டுக்கு நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார் என தெரிவித்தது மட்டுமல்லரமல் திடீரென தனது மேலாடையை கழற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவரது முதுகில் ஒபாமா என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

இதற்கிடையில், வெள்ளை மாளிகையில் கறுப்பு முஸ்லிம் என்று மடோனா ஏளனமாக கூறினார் என்று விமர்சனம் எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்த மடோனா, ஒபாமா முஸ்லிம் அல்ல, கிறிஸ்டியன் என்பது எனக்கு தெரியும். நான் சொல்ல வந்தது என்னவென்றால், நல்ல மனிதர் எப்போதும் நல்ல மனிதராகவே இருப்பார். அவர் எந்த கடவுளை வழிபடுகிறார் என்பது பெரிய விஷயம் அல்ல. அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது பற்றி கவலையில்லை என தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com