சட்டவிரோத புகலிடகாரர்களில் வாழ்விடம் நௌரு தீவு! ஒரு தொகை இலங்கையர் இடமாற்றம்
புகலிடக் கோரிக்கையுடன் அவுஸ் திரேலியா பயணமான இலங்கை யர்கள் குழுவொன்று அந்நாட்டு பிரதான நிலப்பரப்பலிருந்து நௌரு தீவுப் பகுதிக்கு அனுப்பப் பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜா உரிமைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரிலிருந்து விசேட விமானம் மூலம் குறித்த இலங்கையர்கள் குழு நௌரு தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. சட்டவிரோத கடற்பயணங்களின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்குள் உள்நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அந்நாட்டின் புதிய கொள்கைகளின் அடிப்படையில் நௌரு தீவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அதன்பின்னர் அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கான வசதி வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் வாழ்விடமாக நௌரு தீவு மாற்றப்படுமெனவும் அவுஸ்திரேலிய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment